Published : 03 Jun 2016 12:32 PM
Last Updated : 03 Jun 2016 12:32 PM
கூகுள் ஆண்ட்ராய்டு, ஐபோனில் செயல்படக்கூடிய ஸ்பேஸ் செயலியைப் பயன்படுத்தி உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி, பயண விவரங்கள், திட்டங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தைப் பற்றி நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு இமெயில் அல்லது செய்திச் சேவை மூலம் தகவல் தெரிவித்து அழைப்பு விடுக்கலாம். கூகுள் தேடல் சேவை மற்றும் யூடியூப் ஆகிய வசதிகளை உள்ளடக்கியிருப்பதால் தேவையான தகவல்களை எளிதாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட தலைப்புகளில் தகவல் பகிர்வு, உரையாடலுக்கு எந்தச் சேவை உதவும் என கூகுள் தெரிவிக்கிறது. இந்தச் செயலிக்குள் தேடல் வசதியும் இருப்பதால் ஏற்கனவே பகிர்ந்துகொண்ட தகவல்களை எளிதாகத் தேடலாம்.
ஏற்கனவே கூகுள் பிளஸ், கூகுள் ஹாங் அவுட் போன்ற சேவைகள் உள்ள நிலையில் அதே வசதியை அளிக்கக்கூடிய இன்னொரு சேவை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. என்றாலும், பயன்படுத்த எளிதான இந்த சேவை, உடனடியாக ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவைக்காகத் தனியே உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டாம் என்பது இன்னும் வசதி.
மேலும் தகவலுக்கு: >https://get.google.com/spaces/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT