Published : 02 Jan 2017 11:20 AM
Last Updated : 02 Jan 2017 11:20 AM
ஸ்மார்ட் ஜெர்கினை தயாரித்துள்ளது ஹாலம் என்கிற அமெரிக்க நிறுவனம். ஒளிரும் எச்சரிக்கை எல்இடி, மியூசிக் கண்ட்ரோல், ஏர் பேர் கேபிள் என 29 பயன்பாடுகளைக் கொண் டுள்ளது. கழுத்து தலையணை, தூங்கும்போது கண்ணை மறைக்கவும் வசதி உள்ளது.
சிறந்த பிரஷ்
வழக்கமான பிரஷ் பயன்பாட்டில், பல் இடுக்குகளில் சுத்தம் செய்ய முடியாது. அந்த குறையை போக்கும் விதமான மிகச் சிறிய பிரஷ் இது. ஊசி முனை அமைப்பில் பற்களை சுத்தம் செய்யும். இதன் வடிவமைப்பு காரணமாக ஈறுகளில் காயம் ஏற்படாது.
நவீன நோட்டு
நனைந்தாலும் வீணாகாத, எழுதியதை அழிக்கும் வசதி கொண்ட நோட்டு. ராக்கெட்புக்ஸ் என்கிற செயலியுடன் இணைத்து பயன்படுத்தும்போது, எழுதுவதை அப்படியே ஸ்மார்போன், லேப்டாப்பில் பார்க்கலாம். இணையத்தில் சேமிக்கவும் முடியும்.
வைரலாகும் ஜாக் மா வீடியோ
2015 ம் ஆண்டு டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார பேரவை (WEF) அரங்கில் அலிபாபா குழுமத் தலைவர் ஜாக் மா பேசிய மூன்று நிமிட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தனது தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை ஜாக் மா கூறியிருக்கிறார். குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகம். கேஎப்சி நிறுவனத்தில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது குறித்து குறிப்பிட்டிருப்பார். டபிள்யூஇஎப் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த இந்த வீடியோவை 1.74 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
கடைசியாக டிசம்பர் 28-ம் தேதி பகிரப்பட்டுள்ளது 45 நிமிட வீடியோவிலிருந்து இந்த பகுதி எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகம் ஜாக் மாவை 10 முறை நிராகரித்துள்ளது. கேஎப்சி நிறுவனம் சீனாவில் தொடங்கப்பட்டபோது வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். நேர்காணலுக்கு சென்ற 24 பேரில், 23 பேருக்கும் வேலை கிடைத்துவிட்டது. என்னை நிராகரித்திருக்கவில்லை என்றால் நான் தொழிலதிபராக உருவாகியிருக்க முடியாது என்றும் கூறியிருப்பார். பாலின சமத்துவம் குறித்து பேசுகையில் அலிபாபா குழுமத்தின் வெற்றிக்குப் பின்னால் பல பெண்களின் உழைப்பும் இருக்கிறது என்றும் கூறியிருப்பார். புத்தாண்டு நேரத்தில் பலருக்கு உந்துதல் கொடுக்கும் விதமாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT