Published : 30 Sep 2014 06:29 PM
Last Updated : 30 Sep 2014 06:29 PM
2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் பலத்த எதிர்பார்ப்போடு வந்த பல தொழில்நுட்ப சாதனங்கள் சரிவையே சந்தித்தன. இதில் பெரும் வாடிக்கையாளர்களை ரொம்பவே ஏமாற்றியதாக சொல்லப்படுவது 3டி டிவிக்கள்தான்.
பார்வையாளர்கள் முப்பரிமாண முறைப்படி நிகழ்ச்சிகளை பார்க்கலாம், சம்பவங்கள் அருகில் நடப்பதுபோல் இருக்கும் என்று இந்த 3டி டிவிக்களை கூவிக்கூவி வியாபாரம் செய்தார்கள்.ஆனால் சம்பவம் நடந்தது என்னவோ அதை பார்த்தவர்களுக்குதான்.
1500 அமெரிக்க டாலர் முதல் 40000 டாலர் வரை கொடுத்து வாங்கி இந்த டிவியை பார்த்த பலருக்கு தலைவலி, ஹைபர் டென்ஷன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த டிவியை பார்க்க 3டி கண்ணாடி போட வேண்டிய அவசியமும் இந்த சறுக்கலுக்கு முக்கிய காரணம். இந்த சரிவுப்பட்டியலில் ஸ்மார்ட் வாட்ச், விண்டோஸ் போன் என நிறைய டெக் சாதனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT