Last Updated : 29 Aug, 2025 11:24 PM

 

Published : 29 Aug 2025 11:24 PM
Last Updated : 29 Aug 2025 11:24 PM

சாம்சங் கேலக்சி A17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘A’ வரிசையில் கேலக்சி A17 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் கேமரா, ஏஐ அம்சங்கள் மற்றும் விலை பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்சி A17 போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
  • Exynos 1300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 + 5 + 2 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 6ஜிபி / 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 5000mAh பேட்டரி
  • 25 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x