Published : 23 Jul 2025 11:57 PM
Last Updated : 23 Jul 2025 11:57 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி நார்சோ பிராண்டின் கீழ் நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
UNISOC T7250 சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
6,300mAh பேட்டரி
15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
4ஜிபி / 6ஜிபி ரேம்
64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
4ஜி நெட்வொர்க்
இந்த போனின் விலை ரூ.7,299 முதல் ஆரம்பமாகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT