Published : 02 Jul 2025 12:01 AM Last Updated : 02 Jul 2025 12:01 AM
‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், தற்போது நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது ப்ரீமியம் ரக போனாக சந்தைக்கு வந்துள்ளது.
நத்திங் போன் (3) சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
5 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரேஷன் 4 ப்ராசஸர்
பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. மூன்றும் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது
செல்ஃபி கேமராவும் 50 மெகாபிக்சல் உடன் வந்துள்ளது
இந்த போனின் பின்பக்கத்தில் உள்ள Glyph இன்டர்ஃபேஸ் தற்போது பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது
கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
12 ஜிபி / 16 ஜிபி ரேம்
256 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ்
5,150mAh பேட்டரி
65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம்
ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உண்டு
5ஜி நெட்வொர்க்
ட்யூயல் சிம் மோட்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது
இதன் விலை ரூ.84,999 முதல் தொடங்குகிறது. விலையில் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
WRITE A COMMENT