Published : 04 Dec 2024 11:33 PM Last Updated : 04 Dec 2024 11:33 PM
இந்தியாவில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் டிசம்பர் 11 முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது.
சிறப்பு அம்சங்கள்
6.82 இன்ச் எல்டிபிஓ AMOLED Q10 டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
நான்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
6,000mAh பேட்டரி
120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி IMX921 சென்சார் கொண்டுள்ளது பிரதான கேமரா
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரொடெக்ஷன்
எரேஸ், டிரான்ஸ்லேட் மற்றும் சர்க்கிள் டு சேர்ச் உள்ளிட்ட ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது
WRITE A COMMENT