Published : 28 Jul 2024 08:27 PM
Last Updated : 28 Jul 2024 08:27 PM
சென்னை: வாட்ஸ்அப்பில் பயனர்கள் அப்டேட் செய்த ஸ்டேட்டஸை மற்ற பயனர்கள் எளிதில் ரீஷேர் செய்யும் வகையிலான அம்சம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல். இது குறித்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். இந்த சூழலில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்யும் அம்சம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்த தகவலை வெளியிட்டு வரும் Wabetainfo தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் இருப்பது போலவே இருக்கும் என தெரிகிறது. இதற்கென பிரத்யேக பட்டன் ஒன்றும் டிஸ்பிளே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்டேட்டஸாக அதனை ரீஷேர் செய்யலாம். அப்படி செய்யும் போது அதனை பகிர்ந்த பயனருக்கு ஸ்டேட்டஸ் ரீஷேர் குறித்த தகவல் செல்லுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
இப்போதைக்கு வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற பயனர்களின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ய அந்தப் படத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷேர் செய்யலாம். வீடியோ பார்மெட்டாக இருந்தால் அதை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மெட்டா ஏஐ சாட்பாட் வாட்ஸ்அப் உட்பட பல்வேறு மெட்டா தளங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT