Published : 19 Jul 2024 11:12 PM
Last Updated : 19 Jul 2024 11:12 PM
ரெட்மாண்ட்: கிரவுட்ஸ்ட்ரைக்கின் தவறான அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து, வங்கி, தொலைத்தொடர்பு, ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடு முடங்கி உள்ளது. இந்த சூழலில் மைக்ரோசாப்ட் சிஐஓ சத்யா நாதெள்ளா ட்வீட் செய்துள்ளார்.
கிரவுட்ஸ்ட்ரைக்கின் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான அப்டேட் தற்போது திரும்பப்பெறப் பட்டுள்ளது. இருந்தாலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் சிக்கலை எதிர்கொண்ட கணினி பயனர்களே மேனுவலாக சீர் செய்யும் வகையில் சில செயல்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது எக்ஸ் தள பதிவில் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளதாவது. “அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் உடன் மைக்ரோசாப்ட் இயங்கி வருகிறது. இதிலிருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டு செயல்முறையை வழங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Yesterday, CrowdStrike released an update that began impacting IT systems globally. We are aware of this issue and are working closely with CrowdStrike and across the industry to provide customers technical guidance and support to safely bring their systems back online.
— Satya Nadella (@satyanadella) July 19, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT