Published : 16 Apr 2024 10:35 PM
Last Updated : 16 Apr 2024 10:35 PM

மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி64 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 23-ம் தேதி அன்று சந்தையில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோரோலா ‘ஜி’ சீரிஸ் வரிசையில் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு வெளியான மோட்டோ ஜி54 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளிவந்துள்ளது. ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் 5ஜி போனை வாங்க விரும்பும் பயனர்களை டார்கெட் செய்து இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் ஃபுள் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7025 சிப்செட்
  • 6,000mAh பேட்டரி
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டுள்ளது
  • மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோ தெரிவித்துள்ளது
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5ஜி நெட்வொர்க்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது
  • 8ஜிபி வேரியன்ட் ரூ.14,999-க்கும், 12ஜிபி வேரியன்ட் ரூ.16,999-க்கும் கிடைக்கிறது. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x