Published : 15 Apr 2024 10:42 PM
Last Updated : 15 Apr 2024 10:42 PM

ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ரியல்மி P1 புரோ

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி P1 புரோ என்ற மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. P சீரிஸ் போன்களின் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 50 மெகாபிக்சல் சோனி LYT600 கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் போர்ட்ரைட் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • போனுடன் சார்ஜரும் வழங்கப்படுகிறது
  • இந்த போனின் தொடக்க விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது
  • விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x