Published : 11 Apr 2024 08:18 PM
Last Updated : 11 Apr 2024 08:18 PM
சென்னை: வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் டாக்குமென்ட்களை டவுன்லோடு செய்யாமல் அதனுள் என்ன இருக்கிறது என்பதை ப்ரிவியூ வகையில் பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் சோதனை அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் டாக்குமென்டை டவுன்லோடு செய்யாமல் அதனுள் இருப்பதை பார்க்கும் அம்சம் அறிமுகமாக உள்ளது.
இது டாக்குமென்ட் ப்ரிவியூ என அறியப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ரிசீவ் செய்யும் டாக்குமெண்டுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக அது வீடியோ, போட்டோ அல்லது டெக்ஸ்ட் ஃபைலா என்பதை பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என தெரிகிறது. இது குறித்த தகவலை WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT