Published : 24 Oct 2023 06:53 AM Last Updated : 24 Oct 2023 06:53 AM
சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9+ வெளியாகி உள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல்களில் எலக்ட்ரானிக் சாதனங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ9 சீரிஸ் வரிசையில் டேப் ஏ9 மற்றும் டேப் ஏ9+ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி டேப் ஏ9+ சிறப்பு அம்சங்கள்
11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
டால்பி ஆட்டம்ஸ் ஸ்பீக்கர்
குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராஸசர்
ஒரே நேரத்தில் பல்வேறு டாஸ்குகளை பயனர்கள் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்மூத் அப்ளிகேஷன் நேவிகேஷன் மற்றும் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
அதிவேக 5ஜி இணைப்பு
8 மெகாபிக்சல் பிரதான கேமரா
5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
7,040mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது
இதன் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது
கேலக்ஸி டேப் ஏ9 சிறப்பு அம்சங்கள்
8.7 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டா-கோர் ப்ராஸசர்
Wi-Fi மற்றும் LTE என இரண்டு வெர்ஷனில் டேப் ஏ9 வெளியாகி உள்ளது
யுஎஸ்பி டைப் சி
4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
5,100mAh பேட்டரி
மற்ற அனைத்து அம்சங்களும் டேப் ஏ9+ல் இருப்பது போலவே உள்ளது
WRITE A COMMENT