Published : 21 Oct 2023 01:12 AM
Last Updated : 21 Oct 2023 01:12 AM
சான் பிரான்சிஸ்கோ: ஒரே வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இரண்டு வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒரே செயலியில் இரண்டு வெவ்வேறு கணக்குகளை பயனர்கள் பயன்படுத்தும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. ஏற்கெனவே ஒரே கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம் வாட்ஸ்அப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே பணி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் இரண்டு கணக்குகளை நிர்வகித்து வரும் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் எளிதான முறையில் பயனர்கள் தாங்கள் விரும்பும் கணக்கில் இருந்து சாட் செய்ய முடியும்.
இரண்டு கணக்குகளை வாட்ஸ்அப் செயலியில் செட் செய்வது எப்படி?
இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ட்யூயல் சிம் கார்டு அம்சம் கொண்ட போன்களை கொண்டிருக்க வேண்டும் என தெரிகிறது. இது இருந்தால் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் இரண்டாவது கணக்கை மிக எளிதான முறையில் லாக்-இன் செய்யலாம்.
is better than we’re rolling out the ability to add a second account to your WhatsApp on Android. pic.twitter.com/tYvuUPWjsv
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT