Published : 16 Aug 2023 01:03 PM
Last Updated : 16 Aug 2023 01:03 PM
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை ஜெனரேட் செய்து, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல். தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏஐ மூலம் ஸ்டிக்கர் ஜெனரேட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த அம்சத்தை கொண்டுள்ள வாட்ஸ்அப் வெர்ஷனை பீட்டா டெஸ்டர்கள் தங்கள் போன்களில் நிறுவி, சோதனை செய்து பார்த்துள்ளனர். பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கீபோர்டில் ஸ்டிக்கர் டேபில் ‘கிரியேட்’ எனும் டேபை கிளிக் செய்து, தங்களுக்கு என்ன மாதிரியான ஸ்டிக்கர் வேண்டுமென விவரித்து, அதை உருவாக்க முடியுமாம். முற்றிலும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஏஐ ஸ்டிக்கர் உருவாக்கப்படுகிறதாம்.
இது பயனர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமான வகையில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவ மற்றும் உரையாடலுக்கு ஏற்ப இந்த ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். இதன் வாட்ஸ்அப் சார்ந்த மேம்பாடுகளை கண்காணித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.
WhatsApp is rolling out a feature to create and share AI generated stickers. Currently in beta.#WhatsApp
— Mukul Sharma (@stufflistings) August 15, 2023
Via: https://t.co/QXUdx0RkTw pic.twitter.com/Wh0jR0Ud2b
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT