Published : 06 Jul 2023 11:27 AM
Last Updated : 06 Jul 2023 11:27 AM

இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதனோடு ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன், நார்ட் பட்ஸ் 2ஆர், BWZ2 ANC என மேலும் மூன்று சாதனங்கள் அறிமுகமாகி உள்ளன.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 3 மற்றும் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் எப்போது என ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில் நேற்று இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நார்ட் 3 சிறப்பு அம்சங்கள்

  • 6.74 இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 9000 சிப்செட்
  • 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது
  • ஆண்ட்ராய்டு இயங்குதளம் (ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1)
  • 5,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் SuperVOOC அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • பின்பக்கத்தில் 3 கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • ஃபேஸ் ஐடி
  • 8ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.33,999
  • 16ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.37,999
  • ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.26,999 முதல் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x