Published : 03 Jul 2023 09:39 PM
Last Updated : 03 Jul 2023 09:39 PM

மோட்டோரோலா ரேசர் 40, ரேசர் 40 அல்ட்ரா போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

மோட்டோ ரேசர் 40 சீரிஸ் போன்கள்

சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப்-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மோட்டோரோலா ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஃபோல்டபிள் போன் என அறியப்பட்டது. இந்தச் சூழலில் இந்த இரண்டு போன்களும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ரேசர் சீரிஸில் இரண்டு போன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரேசர் 40

  • இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளே ஸ்க்ரீன் 1.5 இன்ச் மட்டுமே உள்ளது. அதுவே அன்-ஃபோல்ட் செய்தால் 6.9 இன்ச் அளவுக்கு டிஸ்பிளே மாறுகிறது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 4,200mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 65 + 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • செல்ஃபி படங்கள் எடுக்க 32 மெகாபிக்சல் கொண்ட கேமரா பிரதான டிஸ்பிளேவில் இடம்பெற்றுள்ளது
  • இந்த போனின் விலை ரூ.59,999

ரேசர் 40 அல்ட்ரா

  • 3.6 இன்ச் கொண்டுள்ளது இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளே. இதுதான் ரேசர் 40 மாடலில் இருந்து இந்த போனை வேறு மாடல் என சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது
  • உட்புற டிஸ்பிளே 6.9 இன்ச் தான் கொண்டுள்ளது
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 8ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ் திறன்
  • 3,800mAh திறன் கொண்ட பேட்டரி
  • 5ஜி நெட்வொர்க் சப்போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.89,999
  • வரும் 15-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்க உள்ளது. பயனர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x