Published : 25 May 2023 06:43 AM
Last Updated : 25 May 2023 06:43 AM

3-வது, 5-வது வழித்தடத்தில் மின்சார கட்டமைப்புகளுக்காக ரூ.533 கோடியில் விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதன்படி, மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.533.87 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் எல்&டி நிறுவனத்தின் ஒப்பந்த துணை மின்நிலைய வணிகப்பிரிவின் தலைவர் ஹெச்.ராஜேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் பால்பண்ணை-சோழிங்கநல்லூர் வரை 3-வது வழித்தடம், மாதவரம் பால் பண்ணை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனையில் துணை மின்நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அமைப்புக்கான அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

3-வது வழித்தடத்தில் 29 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 10 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், 5-வது வழித்தடத்தில் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பணிமனை இதில் அடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 3-வது வழித்தடத்தில் 35.043 கி.மீ. நீளத்துக்கும், 5-வது வழித்தடத்தில் 16.16 கி.மீ. நீளத்துக்கும், மாதவரம் பணிமனையில் 21 கி.மீ. நீளத்துக்கும் மேல்நிலை மின்சாரதளம் அமைக்கும் பணிக்கும் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x