Published : 10 Jul 2014 09:34 AM
Last Updated : 10 Jul 2014 09:34 AM
இட உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையேயான சிவில் பிரச்சினைகளில் காவல் துறையினர் தலையிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள வணிக வளாகம் ஒன்றில் நான் வாடகைக்கு கடை எடுத்து வணிகம் செய்து வருகிறேன். எனக்கும் எனது கடை உரிமையாளருக்கும் இடையே வாடகை தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளன.
இந்நிலையில் எனக்கு எதிராக தேனாம்பேட்டை காவல் நிலை யத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப் படையில் என்னை விசாரணைக்கு வருமாறு தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்பினார். நான் எனது வழக்கறிஞருடன் காவல் நிலை யத்துக்குச் சென்றேன்.
எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனுவில் சிவில் பிரச்சினை சார்ந்த குற்றச்சாட்டுகளே கூறப் பட்டுள்ளன. ஆகவே, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை என்ற அடிப்படையில் என்னை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று சுரேஷ் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரணை மேற்கொண்டார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நமோ நாராயணன், சிவில் பிரச்சினையில் தலையிட காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லாதபோது, இந்த பிரச்சினையில் தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசா ரணை மேற்கொண்டது சரியல்ல என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி சிவ ஞானம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இட உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையேயான வாடகை தொடர்பான பிரச்சினைகளில் தலையிட காவல் துறையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதுபோன்ற புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றங்களையோ அல்லது வாடகைக் கட்டுப்பாட்டு தீர்ப் பாயங்களையோ அணுகி நிவார ணம் தேடிக் கொள்ளுமாறு புகார் தாரர்களுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பிவிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT