Published : 26 Jul 2014 02:53 PM
Last Updated : 26 Jul 2014 02:53 PM
சட்டப் பேரவையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மற்றும் மீன்வளத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடந்தது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பதில் அளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
* செயற்கைமுறை கருவூட்டல் வசதியை கால்நடை வளர்ப்போரின் வசிப்பிடங்களிலேயே அளிக்கும் வகையில் 500 கிராமப்புற இளைஞர் களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் ரூ.4 கோடி செலவில் 500 புதிய செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளால் பராமரிக்கப்படும் கால்நடைகளும், முதலுதவி மற்றும் இனப்பெருக்க வசதிகள் பெற ரூ.2.15 கோடி செலவில் புதிதாக 50 கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
* பர்கூர் மாட்டினத்தை அழிவிலிருந்து காக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் பர்கூரில் ரூ.2.40 கோடி செலவில் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்படும்.
* கால்நடை மருத்துவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி அதன்மூலம் கால்நடைகளுக்கு நவீன மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் முழு ஊதியத்துடன் பட்ட மேற்படிப்பு மற்றும் பிஎச்.டி. படிக்க 15 கால்நடை உதவி மருத்துவர்கள், ஆராய்ச்சி உதவி யாளர்கள், ஆராய்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுமதி வழங் கப்படும்.
* நோய்களை கட்டுப்படுத்தி தடுப்பூசி உருவாக்க சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.1.20 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
* மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் தீவன உற்பத்தி மையங்கள் அமைக்கும் திட்டம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் 100 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும்.
* கால்நடை பராமரிப்புத் துறையின் திட்ட செயல்பாடுகளை செல்போன் மூலம் கண்காணிக்கும் திட்டம் முன்னோடி திட்டமாக திருச்சி மாவட்டத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT