Published : 07 Mar 2023 06:06 AM
Last Updated : 07 Mar 2023 06:06 AM
வேலூர்: வேலூர் ஆப்காவில் தென்னிந் திய சிறை அதிகாரிகளுக்கான ‘செங் குத்தான சிறப்பு கலந்துரையாடல்’ என்ற 5 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பேசும்போது, ‘‘இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிகாரிகள் தங்கள் பதவிகளை மறந்து மாநிலம் விட்டு மாநிலம் கலந்துரையாட வேண்டும். சிறைச்சாலை என்பது தண்டனை அளிக்கும் இடமாக இருக்காமல் மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கான சிறை விதிகள் 1924-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 1980-ம்ஆண்டு நீதியரசர் முல்லா கமிட்டி பரிந்துரை அமல் படுத் தப்பட்டது. 2003-ம் ஆண்டு மாதிரி சிறைத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளுக்கு 100 சதவீதம் தொழிற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருக்கும் திறமைகளை பார்க்க வேண்டும். சிறைவாசிகள் புத்த கங்களை அதிகம் படிக்க வைக்க வேண்டும். இதற்காக, இதுவரை ஒரு லட்சம் புத்தகங்களை பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து பெற்றுள்ளோம்.
அதேபோல், சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொரு தொகுதி யிலும் விளையாட்டு பயிற்சியும் சிறைச்சாலை அளவில் இசைக் குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. விரைவில் சிறைச்சாலைகள் இடையிலான விளையாட்டு, இசை போட்டிகள் நடத்தப்படவுள்ளன. சிறைத்துறை சார்பில் புதிதாக 12 பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத் தப்படவுள்ளன.
இதில், கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும். சமீபத்தில் சிறைச்சாலைகளில் தொழிற் சாலை சலவை இயந்திரங்கள் அமைக்கப்பட்டதை காந்தியின் பேரன் பாராட்டி தமிழக முதல் வருக்கு கடிதம் எழுதியதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ் வொரு சிறைச்சாலைகளிலும் நர்சரி, பூங்கா அமைக்கவும், மூலிகை செடிகள் பராமரிப்பதன் மூலம் அவர்களின் மனநிலை மாறும். அவர்கள் மீண்டும் குற்ற வாழ்க்கைக்கு செல்ல மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது, சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டிஜிபி அமரேஷ் புஜாரி கூறும்போது, ‘‘சிறைவாசிகளின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறைகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் டைல்ஸ் தளத்துடன் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறை களிலும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் மையங்கள் தொடங்கப்படும்.
இங்கு 3, 6 மாதங்கள் பயிற்சி பெறுபவர்கள் வெளியில் சென்றால் தனியாக கம்ப்யூட்டர் மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் நன்னடத்தை சிறைவாசிகளுக்கு கூலி உயர்வு அளிக்கப்பட வுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT