Published : 18 Feb 2023 08:38 AM
Last Updated : 18 Feb 2023 08:38 AM

நாகையில் கரை ஒதுங்கிய சீன நாட்டு சிலிண்டர் செயலிழக்க வைப்பு

நாகப்பட்டினம்

நாகை நகராட்சிக்குட்பட்ட நம்பியார் நகர் கடற்கரையோரம் பிப்.14-ம் தேதி கரையொதுங்கிய சீன நாட்டு சிலிண்டரை மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகைகடலோர காவல் குழும போலீஸார் கைப்பற்றினர்.

அந்த சிலிண்டரில் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் வாசகங்களும், 400 999 7871 என்ற எண்களும் எழுதப்பட்டு இருந்தன. இது விமானம் மற்றும் கப்பலில் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அந்தசிலிண்டர் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி ஜவஹர் அளித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் குழுவினர் நாகைக்கு நேற்று வந்தனர். தொடர்ந்து, நாகை புதிய கடற்கரையில் பாதுகாப்புக்காக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்துடன் போலீஸார் நிறுத்தப்பட்டனர். கடற்கரை பகுதியில்இருந்த பொதுமக்களை முன்கூட்டியே அப்புறப்படுத்தி, அப் பகுதி முழுவதையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர், புதிய கடற்கரையில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, அதில் சீன நாட்டு சிலிண்டரை வைத்து, அதன் மீது மண்மூட்டைகளை அடுக்கி, சிலிண்டரை பாதுகாப்பாக வெடிக்க வைத்து, செயலிழக்கச் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x