Published : 17 Feb 2023 07:06 PM
Last Updated : 17 Feb 2023 07:06 PM
சென்னை: ரயில் மீது கல் ஏறிவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டரல் வரும் பிருந்தாவன் ரயில் நேற்று (பிப்.16) மாலை ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது ரயில் மீது யாரே கல் எறிந்துள்ளனர். இதன் காரணமாக ரயிலின் கண்ணாடி சேதம் அடைந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தண்டவாளத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஏறிந்த கல் ரயில் மீது பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர்களை வரவழைத்து ரயில்வே காவல் துறையினர் ஆலோசனை வழங்கினர். மேலும், தண்டவளாத்திற்கு அருகில் சிறுவர்களை விளையாட விடக் கூடாது என்று தெரிவித்து உறுதிமொழி கடிதம் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், ரயில் மீது கல் ஏறிவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153-இன் படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT