Published : 14 Feb 2023 04:00 AM
Last Updated : 14 Feb 2023 04:00 AM

மங்களூரு - ஹாடியா இடையே கோவை வழியாக மார்ச் 2 வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜார்கண்ட் மாநிலம் ஹாடியா - மங்களூரு இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08645), வரும் 27-ம் தேதி வரை திங்கள் கிழமைகளில் அதிகாலை 4.50 மணிக்கு ஹாடியாவில் இருந்து புறப்பட்டு,

புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் வந்தடையும். இதேபோல, மங்களூரு சென்ட்ரல்-ஹாடியா இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08646), வரும் மார்ச் 2-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஹாடியா சென்றடையும்.

இந்த ரயில்கள், காசர்கோடு, கண்ணூர், தலசேரி, கோழிக்கோடு, சொர்ணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x