Published : 06 Feb 2023 04:00 AM
Last Updated : 06 Feb 2023 04:00 AM

இரட்டை ரயில் பாதை பணி காரணமாக கோவை - நாகர்கோவில், மதுரை ரயில் சேவையில் மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - நாகர்கோவில், மதுரை ரயில் சேவையில் 3 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு, தினசரி இரவு 7 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16321), பிப்ரவரி 6,7,8-ம் தேதிகளில் விருதுநகர் - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த ரயில் நாகர்கோவில் முதல் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். விருதுநகர் - கோவை இடையே இந்த ரயில் இயக்கப்படாது. கோவையில் இருந்து தினசரி காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), பிப்ரவரி 6,7,8-ம் தேதிகளில் கோவை - விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த ரயில் கோவைக்கு பதில் விருதுநகரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும். கோவையில் இருந்து தினமும் மதியம் 2.40 மணிக்கு மதுரை புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16721), பிப்ரவரி 6,7,8-ம் தேதிகளில் திண்டுக்கல் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

திண்டுக்கல் - மதுரை இடையே இந்த ரயில் இயக்கப்படாது. மதுரையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16722), மதுரை - திண்டுக்கல் இடையே பிப்ரவரி 7, 8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரைக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து கோவை புறப்பட்டு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x