Published : 01 Feb 2023 10:51 PM
Last Updated : 01 Feb 2023 10:51 PM

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி: ஆற்காடு சாலையில் பிப்.3 முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: கோடம்பாக்கம் (R-2) போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், ஆற்காடு சாலையில் தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள்:

  • ஆற்காடு சாலையிலிருந்து, வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்வதற்கு தடை செய்யபடுகிறது.
  • சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமிசாலை, சன்னதி சாலை மற்றும் 2 வது அவின்யூ வழியாக அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
  • துரைசாமி சாலையிலிருந்து, சன்னதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்லதடை செய்யப்படுகிறது.
  • சன்னதி தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
  • சைதாப்பேட்டை சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களால் தடை செய்யப்படுகிறது .
  • 100 அடி சர்வீஸ் சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x