Published : 26 Jan 2023 04:15 AM
Last Updated : 26 Jan 2023 04:15 AM

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சென்னை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை (27-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு, வடமேற்காக மெதுவாக நகரக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கான மழை வாய்ப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வரும் 28, 29-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x