Published : 18 Jul 2014 10:53 AM
Last Updated : 18 Jul 2014 10:53 AM
வீடு வாங்க நினைப்போருக்கு மத்திய பட்ஜெட்டில் சாதகமான அம்சங்கள் உள்ளனவா என்பது பற்றியும், நுகர்வோ ருக்கு பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றியும் சம்பந்தப் பட்ட துறையின் பல்வேறு பிரிவு வல்லுநர்கள் விவரித்தனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, சென்னை அண்ணாசாலையில் வியாழக்கிழமை நடந்தது. இதில் ரியல் எஸ்டேட், கட்டுமான பொறியியல், கட்டிட கட்டமைப்பு, கட்டிட வடிவமைப்பு, வங்கி, தீயணைப்பு, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் பங்கேற்று வீடு வாங்குவது தொடர்பாக விளக்கிப் பேசினர். இந்நிகழ்ச்சியை எஸ்.ஜே.ஹெச். ஹோம்ஸ் மற்றும் ஆர்.ஆர்.பி.ஹவுசிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.
கிரெடாய் மாநிலச் செயலாளர் என்.நந்தகுமார் (தேவிநாராயண் ஹவுசிங்), அக் ஷயா பவுண்டேஷன் தலைவர் டி.சிட்டிபாபு, ஜனனி ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.பி.செந்தில் குமார், இந்தியா பிராப்பர்ட்டி டாட் காம் தலைமை நிர்வாக அலுவலர் கணேஷ் வாசுதேவன், சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக கட்டிடக் கலைத்துறை தலைவர் பேராசிரியை ஸ்வேதா மதுசூதனன், பிரின்ஸ் பவுண்டேஷன் நிறுவன இயக்குநர் அசித் மேத்தா, தொழிலாளர் துறை கூடுதல் இயக்குநர் மதன் மோகன், அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர். தாயுமானவன், தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயசேகர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.அகஸ்டின், இந்தியன் வங்கி உதவிப் பொது மேலாளர் இளங்கோ, பட்டய கணக்காளர் என்.ஆர்.கோவிந்தராஜ், மற்றும் வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT