Published : 04 Nov 2022 12:29 PM
Last Updated : 04 Nov 2022 12:29 PM
சென்னை: மருத்துவமனைகளில் வெள்ள் நீர் சூழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழறிஞர் நெடுஞ்செழியன் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மழைக்கால மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது. இந்த முகாமில் காய்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகள் மற்றும் பருவகால கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
சமீபத்திய மழையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் வடியவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருங்காலங்களிலும் மருத்துவமனைகளில் வெள்ள நீர் சூழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு சில பள்ளிகளில் நீர் தேங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT