Published : 31 Oct 2022 06:15 AM
Last Updated : 31 Oct 2022 06:15 AM
சென்னை: பருவமழை காலத்தில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிக்க மாநகர பகுதிக்குள் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஒரு செயற்பொறியாளர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்ன குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை (நவ.1) முதல் 30-ம் தேதி வரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிப்பதற்காக, மண்டலத்துக்கு ஒரு செயற்பொறியாளர் வீதம், 15 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்துக்கு என்.சிங்காரவேலன் (8144930970), மணலி - வி.ஏ. ஏழுமலை (8144930570), மாதவரம் - சி. ஜாய்ஸ் சுமதி (8144931122), தண்டையார்பேட்டை - ஜே. லட்சுமி தேவி (8939856188), ராயபுரம் - பாவைக் குமார் (8144930444), திரு.வி.க.நகர் - கே.ராமமூர்த்தி (8144930958), அம்பத்தூர் - வி.அன்பரசி (8144930956), அண்ணா நகர் - எம்.எஸ்.அகிலாண்டேஸ்வரி (8144930728), தேனாம்பேட்டை - எஸ்.வெண்ணிலா (8144931144), கோடம்பாக்கம் - ஏ.புவனேஸ்வரன் (8144930540), வளசரவாக்கம் - ஏ.புஷ்பலதா (8144930625), ஆலந்தூர்- கே. உமா (8144930690), அடையார்- கே.எம். வெங்கட்ராமன் (8144930848), பெருங்குடி - எஸ்.பிரேமா (8144930924), சோழிங்கநல்லூர் - கே.கலைச்செல்வன் (8144930589) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழைக் காலங்களில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் இரவுநேர பணிகளை கண்காணிப்பதோடு, மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் ஒருங்கிணைப்பு பணிகளை இந்த சிறப்பு அலுவலர்கள் மேற்கொள்வார்கள். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளை மேற்கண்ட அலுவலர்களை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT