Published : 22 Oct 2022 06:48 AM
Last Updated : 22 Oct 2022 06:48 AM
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, ராமேசுவரம், நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, திருச்சி – தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்.06032/31) இன்று (அக்.22) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் வரும் 27-ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சி சென்றடையும். தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06049/50) இன்று இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாளை காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்தரயில் வரும் 26-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்–ராமேசுவரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) நாளை (23-ம் தேதி) சென்ட்ரலில் இருந்து இரவு 8.45மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் தாம்பரத்துக்கு இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து 24-ம் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். நாகர்கோவில்–தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06040) வரும் 25-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
திருவனந்தபுரம்–சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06056/55) வரும் 25-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் 26-ம்தேதி சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT