Published : 12 Oct 2022 04:15 AM
Last Updated : 12 Oct 2022 04:15 AM
உடுமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் இருபோக சாகுபடியில் ஈடுபட்டனர். அந்த வகையில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பிலான நெற்கதிர்கள், மழை நீரில் மூழ்கின. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், வயல்களுக்குள் மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. வயலில் மழை நீர் தேங்கி ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களும் முளைவிடும் நிலையில் உள்ளன. பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT