Published : 08 Sep 2022 09:00 AM
Last Updated : 08 Sep 2022 09:00 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வட தமிழகப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப். 8) தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 9,10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வரும் 8-ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT