Published : 24 Aug 2022 04:55 AM
Last Updated : 24 Aug 2022 04:55 AM

கட்டிடங்களில் தாறுமாறாக பறக்கும் தேசிய கொடி: தேச பற்றாளர்கள் வேதனை

தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தலைகீழாக தேசிய கொடியை பறக்கவிட்டு அவமதிக் கப்பட்டுள்ளது. படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள், தாறுமாறாகவும் மற்றும் தலை கீழாகவும் பறந்து அவமதிக் கப்படுகிறது என தேச பற்றாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங் களில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும், தேசிய கொடியை ஏற்றி இறக்கும் போதும், பறக்க விடும் போதும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலை மாவட்டத்தில் உள்ள குடிசை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், திரையரங்குகள் உட்பட பெரும்பாலான கட்டிடங் களில் கடந்த 13-ம் தேதி முதல் சுதந்திர தினமான 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி மக்கள் வணங்கினர்.

அதன்பிறகு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேசிய கொடியை இறக்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர். ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்றிய தேசியக் கொடியை கண்டு கொள்ளவில்லை.

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தேசிய கொடிகள் தாறுமாறாக பறக்கிறது. முடிச்சுகள் அவிழ்ந்து தலைகீழாகவும் பறக்கிறது. இதனால், தேசிய கொடியின் புனிதம், பெருமை, மாண்புகள் மற்றும் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியை பறக்கவிட இன்னுயிர் நீத்த வீரர்களின் தியாகம் ஆகியவை அவமதிக்கப்படுவதாக தேச பற்றாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்றப் பட்ட தேசிய கொடியை முறையாக கீழே இறக்கி, பாதுகாப்பாக வைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x