Published : 23 Jun 2014 09:12 AM
Last Updated : 23 Jun 2014 09:12 AM

செப்.24-ல் செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்

இந்தாண்டு செப்.24-ல் செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதையில் மங்கள் யான் நுழையும் என்றார் சந்திர யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் கோவை கைலாஷ் அன்கோ நிறுவனம் சார்பில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கி அவர் பேசியது:

மனிதன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் ஓய்வு கூடாது. இந்தியா நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. நிலவை தொட்ட பின்னர், செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது. அது, வரும் செப். 24-ல் செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழையப் போகிறது.

இதோடு இந்தியாவின் பயணம் முடியவில்லை. சூரியனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதித்யா என்ற திட்டம் தயார் நிலையில் உள்ளது. ஓய்வு எடுத்தால் இது சாத்தியமாகாது. எனவே, ஒரு போதும் ஓய்வு கூடாது.

தாய்மொழியில் படித்தவர் களால்தான் சுயமாய் சிந்திக்க முடியும். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுடன் நமது ஆய்வுத் திட்டங்கள் குறித்து நான் உரையாடியதற்கு தாய்மொழி கொடுத்த ஊக்கம்தான் காரணம்.

எங்கள் காலத்தில் வாய்ப்புகள் குறைவாக இருந்தன. தற்போது வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எந்தத் துறையாக இருந்தாலும் கொஞ்சம் கவனத்துடன் சரியாகத் திட்டமிட்டு, வாய்ப்புகளை சரி யாகப் பயன்படுத்தினால் எதையும் தாண்டி நீங்கள் முன்னேறலாம் என்றார். இஸ்ரோ விஞ்ஞானி எஸ். பாண்டியன் விழாவுக்கு தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x