Published : 05 Jun 2022 04:30 AM
Last Updated : 05 Jun 2022 04:30 AM
கடந்த 8 ஆண்டுகளில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்உற்பத்தி இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக மத்திய நிலக் கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று முன்தினம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவ னத்திற்கு வருகை தந்தார். என்எல்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார், நிறுவன இயக்குநர்கள், தலைமை கண்காணிப்புத்துறை அதிகாரி மற்றும் மூத்தஅதிகாரிகள் அமைச் சரை வரவேற்றனர்.
அமைச்சர், சென்னையில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத் தின் புதுப்பிக்கப்பட்ட, பதிவு அலுவலகத்தை, நெய்வேலியில் இருந்து காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். பின்னர் என்எல்சி மூத்த அதிகாரிகளுடன் கலந்து ரையாடினார். தொடர்ந்து, அங்கீக ரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சங்கங் களின் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நலச்சங்க கூட்டமைப் புகளின் பிரதிநிதிக ளுடன் அமைச்சர் உரையாடினார்.
மேலும், கரோனாவால் உயிரிழந்த ஊழி யர்களின் வாரிசுகள் 6 பேருக்கு, பணி நியமன ஆணைகளை நேற்று முன்தினம் லிக்னைட் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை விருந்தினராக உரையாற்றிய மத்திய அமைச்சர், இன்றைய நிலையில், இந்தியாவின் எரிசக்தி தேவையில், நிலக்கரியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
6,061 மெகா வாட் உற்பத்தி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்திந்த மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, “கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2,740மெகா வாட்டிலிருந்து 6,061மெகா வாட்டாக இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னில் இருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த் தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் என்எல்சி ஐஎல், பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் பழுப்பு நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி, மற்றும் மரபுசாரா மின் உற்பத்தி என்கிற பல்வகை மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவன மானது, நவரத்னா அந்தஸ்தைப் பெற்ற தமிழ்நாட்டின் மிகப் பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனம். தமிழ்நாட்டின் நெய்வேலியில் தொடங்கி, ராஜஸ்தான், உத்தரபிர தேசம், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற பிற மாநிலங்களுக்கும் பரந்து விரிந்து, பான் இந்தியா நிறுவனமாக என்எல்சி இந்தியா மாறியுள்ளது. அசாம் மாநிலத்திலும் தனது புதிய திட்டங்களைத் தொடங்க உள்ளது.
என்எல்சிஐஎல், அதன் உற் பத்தித் திறனில் 45 சதவீதத் துக்கும் மேலான, அனல் மின் சக்திமற்றும் அதன் முழு மரபு சாராமின்சக்தி உற்பத்தியை தமிழகத் திற்கு வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத் துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்றும் அப்போது மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT