Published : 22 May 2022 04:15 AM
Last Updated : 22 May 2022 04:15 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட் டங்களில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் மழை நீடிக்கிறது. வார இறுதி நாளான நேற்று குற்றாலத்தில் கூட்டம் குவிந்ததால் அருவிகள் களைகட்டியிருந்தன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இரு மாவட்டங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
அடவிநயினார்- 21, கொடுமுடியாறு- 15, பாபநாசம்- 12, ஆய்குடி- 11, சேர்வலாறு- 10, தென்காசி - 8.4, கருப்பா நதி- 7 , குண்டாறு- 6, அம்பாசமுத்திரம்- 4, சங்கரன்கோவில், கடனா அணை மற்றும் ராமநதி அணையில் தலா - 3 , மணிமுத்தாறு- 2.8, நாங்குநேரி மற்றும் செங்கோட்டை தலா - 2.
அணைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 62.75 அடியாக இருந்தது. அணைக்கு 1,765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 354 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.45 அடியாக இருந்தது. அணைக்கு 227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா நீர்மட்டம் 38 அடியாக இருந்தது. அணைக்கு 89 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 10 கனஅடி தண்ணீர் திறந்துவி டப்பட்டிருந்தது.
84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 46 அடியாக இருந்தது. அணைக்கு 49 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 5 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மற்ற அணைகளின் நீர்மட்டம் : சேர்வலாறு- 79.66 அடி, கருப்பா நதி- 38.39, குண்டாறு- 16.87, அடவிநயினார்- 50, வடக்கு பச்சையாறு- 21.25, நம்பியாறு- 13.05, கொடுமுடியாறு- 39.
குற்றாலத்தில் கூட்டம்
இதனிடையே, மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று ஓரளவுக்கு தண்ணீர் கொட்டியது. இந்த அருவிகளில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வார இறுதி நாளான நேற்று குற்றாலம் களைகட்டியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 62.75 அடியாக இருந்தது. அணைக்கு 1,765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT