Published : 24 Apr 2022 04:15 AM
Last Updated : 24 Apr 2022 04:15 AM
சிதம்பரம் ராஜா முத்தையா அரசுமருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை தனியார் மருத் துவக் கல்லூரியில் கட்டப்படும் கல்விக் கட்டணத்தை கட்ட வேண் டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு நெருக்கடி தந்தது.
ஆனால், மாணவர்கள், அரசு மருத்துவக்கல்லூரியில் வாங்கப்படும் கல்விக் கட்டணத்தை தான் கட்டுவோம் என்று கூறி கடந்த10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 11 நாட்கள் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக்கல்லூரி வளாகம், மருத்துவக்கல்லூரி புல முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் மாலை நேரங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 21-ம் தேதியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 3-வது நாளாக மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக் கணித்து கருப்புசட்டை அணிந்து, கருப்புகொடி ஏந்தி, கருப்பு தினமாக அறிவித்து, 'அரசு கட்டணம் வேண்டும்' என்று ரத்த கைரேகையால் எழுதி மருத்து வக்கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT