Published : 03 Apr 2022 09:23 AM
Last Updated : 03 Apr 2022 09:23 AM
தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்களிடம் கோபத்தில் அவமரியாதையாக பேசிய காவல்உதவி ஆய்வாளரை தற்காலிகபணிநீக்கம் செய்து எஸ்பி ரவளிப்பிரியா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் வேலாயுதம்(55). இவர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக தனியார் மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றும் பூக்காரத்தெருவைச் சேர்ந்த வனிதா(42), வசந்தா(28) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் வேலாயுதம், அவர்கள் முகக்கவசம் அணியாதது குறித்து கேட்டார். இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கோபமடைந்த காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் அந்தப் பெண்களை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பொதுஇடத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசியது மற்றும் காவல் துறை பணிக்குஇழுக்கு ஏற்படுத்தியது போன்றவற்றுக்காக உதவி ஆய்வாளர் வேலாயுதத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்பி ரவளிப்பிரியா நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT