Published : 20 Mar 2022 06:30 AM
Last Updated : 20 Mar 2022 06:30 AM

காலாவதி குளிர்பானங்களை விற்ற 484 கடைகளுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சென்னை

காலாவதி குளிர்பானங்களை விற்பனை செய்த 484 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டன. ஆய்வின் தொடர்ச்சியாக ரூ.9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் குளிர்பானங்கள் கடைகளில் வாங்கும் போது காலாவதி நாளினை சரி பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x