Published : 19 Mar 2022 04:25 AM
Last Updated : 19 Mar 2022 04:25 AM
புதுச்சேரியில் வியாழக்கிழமை 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏக்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பார்த்தனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் வெளியான 'கடைசி விவசாயி', 'காஷ்மீர் பைல்ஸ்' ஆகிய இரு திரைப்படங்கள் மக்க ளின் கவனத்தை ஈர்த்துள்ளன. விவசாயிகள் மீது அக்கறை கொண்டு முக்கியத்துவம் பெற்றபடமாக 'கடைசி விவசாயி' உள்ளது.ஆனால் 'காஷ்மீர் பைல்ஸ்' படம் அப்படி அல்ல.
காஷ்மீரத்தைச் சேர்ந்த புரோகிதர்களான பண்டிட் கள் அங்கே ஊடுருவியுள்ள தீவிரவாதத்தால் தங்கள் வீடுகளையும், மாநிலத்தையும் விட்டு வெளியேறிய துயரத்தை பார்ப்பவர் மனம் உருகும்படி உணர்ச்சிகரமாக பேசுகிறது.
பண்டிட்கள் வெளியேறும் போது அவர்களின் வீட்டுச் சாவிகளை அண்டை வீட்டாரான இஸ்லாமிய குடும்பத்தாரிடம்தான் நம்பிக்கையுடன் ஒப்படைத்து வந்ததாக வரலாறு இருக்கிறது. ஆனால் இந்தப்படம் ஒட்டுமொத்த காஷ்மீர் முஸ்லீம்களையும் தீவிர வாதிகளாக சித்தரித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை அப்பட்டமாக தூண்டக்கூடிய படமாக அது வெளியா கியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இந்த மதப்பகைமை வளர்க்கும் படத்தைதிரையரங்கில் பார்த்து சமூகத் தளங்களில் வெளியிட்டுள்ளது உள்நோக்கம் கொண்ட செயலாகும். மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் செயல்.
விவசாயிகளின் அவலத்தை வெளிப்படுத்தும் 'கடைசி விவசாயி'போன்ற படத்தை பார்த்து இதுபோன்று செய்தி வெளியிடாத இவர்கள், இந்தப் படத்துக்கு மட்டும்விளம் பரப்படுத்துவது என்பதுமேற்படி படம் அது முன்னெடுக்கும்மதப்பகைமை அரசியலுக்கு ஆதரவு அளிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். ஆளுநர், முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பார்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT