Published : 18 Mar 2022 04:15 AM
Last Updated : 18 Mar 2022 04:15 AM

பிச்சாவரத்தில் 3 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

பிச்சாவரம் வனத்துறை சார்பில் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடலூர்

பிச்சாவரம் வனத்துறை சார்பில் 3 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் கடற்கரை பகுதியில் முட்டையிட்டு செல்லும். அவற்றை வனத்துறையினர் சேமித்து செயற்கை பொரிப்பகத்தில் வைந்துகுஞ்சு பொரித்தவுடன் கடலில் விடுவது வழக்கம். பிச்சாவரம் வனத்துறை சார்பில் கடற்கரை பகுதிகளில் 20 ஆயிரம் ஆமை முட்டைகள் சேமித்து பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன. இதில் பொரித்த ஆமை குஞ்சுகளை வனத்து றையினர் 2 முறை கடலில் விட்டனர். நேற்று 3-வது முறையாக 3 ஆயிரத்து 197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின துறை முதல்வர் அனந்தராமன், மாங்ரோவ் நிபுணர் டாக்டர் கதிரேசன், பேராசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.

இதுவரை 6 ஆயிரத்து 747 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x