Published : 16 Mar 2022 09:55 AM
Last Updated : 16 Mar 2022 09:55 AM

கொடைக்கானல் மலையில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ: வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லை

கொடைக்கானல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து எரிந்து வந்த காட்டுத்தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவந்து அணை க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் மலைப்பகுதியில் கோடை காலத்தில் வனப்பகுதியில் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ அவ் வப்போது பற்றி எரிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய முதல் வாரத்திலேயே காட்டுத்தீ மளமளவென பரவியதில், பல ஏக்கர் வனப்பகுதியில் இருந்த அரியவகை மரங்கள் கருகி ன. வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன. காட்டுத்தீயை அணைக்க போதிய நவீன உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்க வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். ஒருவழியாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து எரிந்து வந்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடைக்கானல் மச்சூர் வனப் பகுதிக்கு உட்பட்ட தோகைவரை, ஆனைமலை காப்பகத்துக்கு உட்பட்ட கொழுமம், பழனி வனச் சரகத்துக்கு உட்பட்ட ஓடைகரை உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது 15 இடங்களில் 29 ஏக்கர் பரப்பளவில் எரிந்துள்ளது. இதில் எந்த வனவிலங்குகளும் பாதிக்கப்படவில்லை. கொடைக்கானல் வனப்பகுதிகளில் தீ பரவுகின்றதா என 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

வனப்பகுதியில் தீ வைத்தாலோ அல்லது தனியார் தோட்டங்களில் வைக்கப்படும் தீயானது வனப்பகுதிக்குள் பரவினாலோ அதற்கு காரணமானவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் GPRS தொழில்நுட்பம் மூலம் தகவல் கிடைக்கப்பெற்று தீயை கட்டுப்படுத்த வனத்துறை தயாராக உள்ளது, என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x