Published : 11 Mar 2022 04:25 AM
Last Updated : 11 Mar 2022 04:25 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலபனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட உக்கடை கமலாபுரம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் கச்சா எண்ணெய் எடுத்துவரும் இடத்தில், குட்டை போன்ற பகுதியை ஏற்படுத்தி, அதில் ரசாயனக் கழிவுகளை சேமித்து வைத்துள்ளது.
இந்த குட்டை பகுதி நிரம்பி, அருகில் இருந்த சுமித்ரா என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலத்தில் பரவியது.
இதனால், விளைநிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஓஎன்ஜிசி பணிகள் நடைபெறும் வளாகத்தின் முன்பு கமலாபுரம் கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மார்ச் 12-ல்(நாளை) அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள நிலத்தின் மண்ணை அகற்றிவிட்டு, புதிதாக மண் நிரப்பவும் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT