Published : 06 Mar 2022 04:20 AM
Last Updated : 06 Mar 2022 04:20 AM
நாட்டிலேயே முதல்முறையாக முற்றிலும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம் சிவகாசி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிறுகுறு நிறுவனங் களை ஒருங்கிணைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் (ஓடிஓபி) என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்துக்கு சிறுதானியங்கள் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, வெள்ளை சோளம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டு நிலையத்தை அமைக்க 35 சதவீத மானியத்தை (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) மத்திய அரசு வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் சிறுதா னியங்களை விளைவிக்கும் அதே இடத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய முடியும்.
இதற்காக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையால் பயிற்சி பெற்ற அல்லது தமிழ் நாடு ஊரக மேம்பாட்டுத் திட் டத்தில் பயிற்சிபெற்ற விவசாய தொழில் முனைவோருக்கு சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி விருதுநகர் மாவட் டத்தில் சிவகாசி அருகே உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தில் இந்திரா என்ற விவசாயி சிறுதானிய சுத்தி கரிப்பு நிலையத்தை ரூ.5.5 லட்சம் செலவில் அமைத் துள்ளார். இங்கு உள்ள இயந்திரங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் வணிகம் மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் ரமேஷ், வேளாண் அலுவலர் முத்தையா ஆகியோர் கூறுகையில், "இந்த சிறுதானிய சுத்திகரிப்பு நிலையத்தில் சிறுதானியங்களை சுத்தம் செய்யும் இயந்திரம், கல் நீக்கும் இயந்திரம், தோல் நீக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுவாக இந்த இயந்திரங்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மும்முனை மின்சாரம் அவசியம்.
எனவே, மும்முனை மின்சாரம் விநியோகம் இருக்கும் நேரத்தில் மட்டுமே இந்த இயந்திரங்களை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது. மற்ற நேரங்களில் இயக்க முடியாததால், தேவையற்ற கால விரயம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சிறுதானியங்களை சுத்தி கரிப்பு செய்ய முடிந்தது.
இந்நிலையை மாற்ற எந்த நேரத்திலும் மோட்டார்களை இயக்கும் வகையில் ஒரு முனை மின்சாரத்தில் இயங்கும் வகை யில் தனியார் நிறுவனத்தின் உதவியோடு மோட்டார்களை வடி வமைத்துள்ளோம்.
அதோடு, 100 சதவீதம் சூரிய மின்சக்தியில் (சோலார்) இயங்கும் வகையில் பேட்டரிகளை பொருத்தியுள்ளோம். இதனால், எப்போது வேண்டுமானாலும் இயந்திரங்களை இயக்க முடியும்.
இத்தொழில்நுட்பம் நாட்டி லேயே முதல் முறையாக இங்கு 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 300 கிலோ சிறு தானி யங்களை சுத்திகரிக்க முடி யும். ஒரு கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.17 வரை கூடுதலாக வருமானம் ஈட்டலாம்.
மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதா னியங்களை வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் உழவர் உற் பத்தியாளர் நிறுவனங்கள் பெரு மளவில் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கிறது. இதேபோன்று மாவட்டத்தின் 80 இடங்களில் சோலாரில் இயங்கும் சிறுதானிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT