Published : 05 Mar 2022 04:20 AM
Last Updated : 05 Mar 2022 04:20 AM

அடித்தட்டு மக்களுக்காக பணிபுரிவேன்: திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி

திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயராக பொறுப்பேற்ற ஜோ.இளமதியுடன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி, துணை மேயராக ராஜப்பா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று காலை மேயர் பதவிக்கான வேட்மனு தாக்கல் நடைபெற்றது. திமுக சார்பில் ஜோ.இளமதி மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டி யின்றி ஜோ.இளமதி மேயராக ஒருமனதாக தேர்வானார்.

உடனடியாக நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், மேயருக்கான அங்கி மற்றும் 101 பவுன் தங்கச் சங்கிலி அணிந்து வெள்ளி செங்கோல் உடன் மேயர் நாற்காலியில் ஜோ.இளமதி அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் 48 கவுன்சிலர்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் 5 பேர். இதில் 4 கவுன்சிலர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில், ஒரு அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 44 பேர் பங்கேற்றனர். கவுன்சிலர் கள் அமர சீனாவில் தயாரிக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் வரை மாமன்றக் கூட்ட அரங்கில் ‘எம்.ஜி.ஆர். மாமன்றக் கூடம்’ என்று பெரிய அளவில் பொறிக்கப் பட்டிருந்த பெயர்ப் பலகை இருந்த நிலையில், நேற்று மேயர் பதவியேற்பு விழாவுக்கு முன் அகற்றப்பட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் ராஜப்பா வேட்புமனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராஜப்பா துணைமேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு, மேயர் இளமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் மாநகராட்சியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே எனது முதல் பணி. மாநகராட்சிக்கு தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, கழிவு நீரோடை போன்ற வசதிகள் அனைத்தும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தி ருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், சுகாதாரப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x