Published : 27 Feb 2022 01:56 PM
Last Updated : 27 Feb 2022 01:56 PM

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (28-ம் தேதி) முதல் மார்ச் 3-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு உள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதையொட்டியுள்ள 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், பிரதோஷம் மற்றும் மார்ச் 1-ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி நாளை (28-ம் தேதி) முதல் மார்ச் 3 வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல வனத்துறையும், கோயில் நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் நீரோடைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x