Published : 27 Feb 2022 10:55 AM
Last Updated : 27 Feb 2022 10:55 AM
உக்ரைன் நாட்டில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு மருத்துவக் கல்லி படிக்கச் சென்ற காஞ்சிபுரம் மாணவி சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 10 பேர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கைலாசநாதர் கோயில் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் மருத்தும் படிக்க கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் உக்ரைன் சென்றார்.
அந்த நாட்டின் கிழக்குமாகணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். இச்சூழலில் உக்ரைன், ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இருப்பினும் அங்குள்ளவர்கள் இந்தியா திரும்ப போதிய விமானங்கள் இல்லாததால் பல மாணவர்களால் திரும்பி வர முடியவில்லை. தற்போது போர் தொடங்கிவிட்ட சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ, தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக இவர்கள் தங்கியுள்ள பகுதியில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கீழ்தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவுக்கு மட்டும் மேல்தளம் செல்கின்றனர். இவர்களிடம் தற்போது குறைந்த அளவிலேயே உணவு உள்ளதாகவும், இந்தப் பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்களது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT