Published : 23 Feb 2022 06:24 AM
Last Updated : 23 Feb 2022 06:24 AM

தனிப்பெரும்பான்மை பலத்துடன் திண்டுக்கல், சிவகாசி மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது

திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி.

திண்டுக்கல்

திண்டுக்கல், சிவகாசி மாநகராட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப் பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அதிக வார்டுகளில் முன்னிலை வகித்தனர். அடுத்தடுத்த சுற்றுக்களிலும் திமுக அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பதிவான வாக்குகள் நேற்று பிற்பகலில் எண்ணி முடிக்கப்பட்டன. இதன் படி திமுக-30, அதிமுக-5, மார்க்சிஸ்ட்-3, காங்கிரஸ்-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், பாரதிய ஜனதா ஆகியவை தலா 1, சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

1-வது வார்டு-மா.கிருபாகரன் (திமுக), 2-கணேசன் (மார்க்சிஸ்ட்), 3-வி.இந்திராணி, 4-சி.எஸ்.ராஜ்மோகன் (அதிமுக), 5-ஜெ.சுவாதி (திமுக), 6-ஒ.சரண்யா (திமுக), 7- ஆர்.சுபாஷ் (திமுக), 8-ரா.ஆனந்த் (திமுக), 9-பெ.சாந்தி (திமுக), 10-ஜெ.பானுப்பிரியா (திமுக).

11-மாரியம்மாள் (மார்க்சிஸ்ட்), 12-சி.ஜானகிராமன் (திமுக), 13-அ.அருள்வாணி (திமுக), 14-தனபாலன் (பாரதிய ஜனதா), 15-சத்தியவாணி (அதிமுக), 16-மூ.சேகர் (திமுக),17-வெங்கடேஷ் (சுயேச்சை), 18-அ.முகமதுசித்திக் (திமுக), 19-அ.ஆரோக்கிய செல்வி (திமுக), 20-ஜெ.ஜெயந்தி (திமுக).

21-கார்த்திக் (காங்கிரஸ்), 22-கே.செந்தில்குமார் (திமுக), 23-ஜெ.இளமதி (திமுக), 24-ச.ஸ்டெல்லாமேரி (திமுக), 25-நா.சிவக்குமார் (திமுக), 26-முகமதுஇலியாஸ் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 27-பாரதி (காங்கிரஸ்), 28-நடராஜன்(விடுதலை சிறுத்தைகள்), 29-செ.மனோரஞ்சிதம் (திமுக), 30-எ.லட்சுமி (திமுக).

31-உமாதேவி (அதிமுக), 32-ச.ராஜப்பா (திமுக), 33-அ.ஜான்பீட்டர் (திமுக), 34-பாஸ்கரன்(அதிமுக), 35-ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்), 36-மு.பவுமிதாபர்வீன் (திமுக), 37-பா.நித்யா (திமுக), 38-வசந்தி (சுயேச்சை), 39-மு.பிலால்உசேன் (திமுக), 40-கே.ஹசீனாபர்வீன் (திமுக).

41-விமலா ஆரோக்கிய மேரி (சுயேச்சை), 42-சி.தெரசாமேரி (திமுக), 43-விஜயா (திமுக), 44-மார்த்தாண்டன் (சுயேச்சை), 45-அமலோற்பமேரி (அதிமுக), 46-குலோத் துங்கன் (சுயேச்சை), 47-சுபாஷிணி (திமுக), 48-காயத்திரி (திமுக).

சிவகாசி

சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சிவ காசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.

இதில் திமுக-24, அதிமுக-11, காங்கிரஸ்-6, மதிமுக, பாஜக, விசிக தலா ஒன்று, சுயேச்சைகள்-4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

1-செல்வம் (அதிமுக), 2- சசிக்குமார் (திமுக), 3- திருப்பதி (திமுக), 4-அழகுமயில் (அதிமுக), 5-இந்திராதேவி (திமுக), 6-நிகா (அதிமுக), 7-சேதுராமன் (அதிமுக), 8- துரைப்பாண்டியன் (திமுக), 9-சுதாகரன் (திமுக), 10-சாந்தி (அதிமுக).

11-சாமுவேல் (சுயேச்சை), 12-குருசாமி (திமுக), 13-மாரீஸ்வரி (அதிமுக), 14-சாந்தி (அதிமுக), 15-நாகஜோதிலட்சுமி (திமுக), 16-சுகன்யா (திமுக), 17-நிலானி (அதிமுக), 18-மாணிக்கம் (திமுக), 19-மகேஸ்வரி (சுயேச்சை), 20-பொன்மாடத்தி (திமுக).

21-சந்தனமாரி (அதிமுக), 22-சரவணக்குமாா் (திமுக) 23-அசோக்குமாா் (விசிக), 24-ஞானரஞ்சித் ராஜா (திமுக), 25-கதிரவன் (சுயேச்சை), 26-சூரியா (திமுக), 27-பாக்கியலட்சுமி (திமுக), 28- வெயில்ராஜ் (திமுக), 29-தங்கப்பாண்டியம்மாள் (காங் கிரஸ்), 30-கரைமுருகன் (அதிமுக).

31-மகேஸ்வரி (திமுக), 32-ஜான் முருகேசன் (திமுக), 33-பாஸ்கரன் (பாஜக), 34-சங்கீதா (திமுக), 35-விக்னேஷ் பிரியா (திமுக), 36-மகேஸ்வரி (காங்கிரஸ்), 37-ஜெயினுலாபுதீன் (திமுக), 38-ரேணு நித்திலா (திமுக), 39-சீனிவாசராகவன் (மதிமுக), 40-ஞானசேகரன் (திமுக).

41-சிவகுமாரி (காங்கிரஸ்), 42-தனலட்சுமி (காங்கிரஸ்), 43-ரவிசங்கர் (காங்கிரஸ்), 44-தங்கப்பாண்டி செல்வி (சுயேச்சை), 45-தனலட்சுமி (காங்கிரஸ்), 46-சேவுகன் (திமுக), 47-ஜெயராணி (திமுக), 48-சசிகலா (திமுக).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x