Published : 21 Feb 2022 06:32 AM
Last Updated : 21 Feb 2022 06:32 AM
சிவகங்கை நகராட்சி 1-வது வார்டில் போட்டியிட்ட வேட் பாளர்கள் அனைவரும் வாக்குப் பதிவு முடிந்ததும் யார் வெற்றி பெற்றாலும் நண்பர்களாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் என உறுதி ஏற்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியைக் கைப்பற்றுவதில் அதிமுக, திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. இத னால் பல வார்டுகளில் இரு தரப் பினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. ஆனால் 1-வது வார்டில் சிறு சலசலப்புகூட ஏற்படாமல் வாக்குப்பதிவு நடந் தது.
இந்த வார்டில் அதிமுக சார்பில் ராஜ்குமாரன், காங்கிரஸ் சார்பில் மகேஸ்குமார், பாஜக சார்பில் மனோகரன், அமமுக சார்பில் பழனி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயதுரை மற்றும் 2 சுயேச்சைகள் என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடி அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பாக கட்சி பேதமின்றி வேட்பாளர்கள் அனைவரும் ஒன் றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் யார் வெற்றி பெற்றாலும் நண்பர்களாக இருந்து மக்களுக்கு சேவை செய்வது என உறுதியேற்றனர். இந்த சம்பவம் ஆரோக்கியமான அரசியலுக்கு முன்னுதாரணமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT